உலகம்

கொரோனா நிதி: ரூ.100 கோடிக்கும் மேல் கொடுத்த டுவிட்டர்!

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளில் இருந்து உதவிகள் குவிந்து கொண்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு பணமாகவும் மருத்துவ உபகரணங்களாகவும் வழங்கி வருகின்றன. அது மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் நிதியுதவிகளை அள்ளிக் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக 15 மில்லியன் டாலர் வழங்குவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 110 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டுவிட்டரில் அதன் சிஇஓம் ஜேக் பெட்ரிக் டோசே என்பவர் கூறியபோது இந்த தொகையை 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யூஎஸ்ஏ ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இந்த தொகை கொடுக்கப்படும் என்றும், அந்தத் தொகையை இந்த தொண்டு நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோன சிகிச்சை மையங்களுக்கு நேரடியாக வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் சி.இ.ஓ பெட்ரிக் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து இந்தியர்கள் பலர் அவருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version