இந்தியா

அரை மணி நேரத்தில் மீண்டும் புளுடிக் கொடுத்த டுவிட்டர்: தோனி ரசிகர்கள் எதிர்ப்பு எதிரொலியா?

Published

on

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த புளுடிக் திடீரென சில நிமிடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் டோனியின் டுவிட்டர் பக்கத்துக்கு ப்ளூடூத் கிடைத்துள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது பயனாளர்களின் உண்மை தன்மையை அங்கீகரித்து வெரிஃபைட் என்ற புளுடிக் வழங்கிவருகிறது. பெரும்பாலும் உயர் பதவியில் உள்ளவர்கள் சினிமா மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு புளுடிக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புளுடிக் வசதி பெற்ற அவர்கள் தங்களுடைய கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பது டுவிட்டரின் விதியாக இருந்தது. ஆனால் தோனியின் டுவிட்டர் பக்கம் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக தெரிகிறது. கடைசியாக ஜனவரி 8ஆம் தேதி தோனி ஒரு டுவிட்டை பதிவு செய்து இருந்தார். அதன் பின் அவர் கடந்த எட்டு மாதங்களில் எந்தவித டுவிட்டையும் அவர் பதிவு செய்யவில்லை.

இதனை அடுத்தே டுவிட்டர் நிறுவனம் தோனியின் புளுடிக்கை நீக்கியது. ஆனால் தோனியின் புளுடிக் நீக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். டுவிட்டர் நிறுவனத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இதனை அடுத்து ரசிகர்களின் கொந்தளிப்பு காரணமாக டுவிட்டர் நிறுவனம் மீண்டும் தோனிக்கு புளுடிக் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கமும் இதே காரணத்திற்காக புளுடிக் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version