உலகம்

டிவிட்டர் சிஇஓ பதவி நீக்கமா? அதிர்ச்சி மற்ற ஊழியர்கள்!

Published

on

டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக எலான் மஸ்க் சிஇஓ பதவியை ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஸ்கூட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் கொடுத்து எலான் மஸ்க் வாங்கினார் என்பது தெரிந்ததே. டுவிட்டர் நிறுவனம் தற்போது கைமாறியுள்ள நிலையில் அதன் தலைமை செயல் அதிகாரி மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது .

மேலும் டிவிட்டர் சிஇஓ பதவியை எலான் மஸ்க் தன் வசம் வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் கைமாறி உள்ளதால் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என்று நிலையில் தற்போது சி.இ.ஓ பதவியே பறிக்கப்படுவதால் மற்ற ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது .

டிவிட்டர் சிஇஓ வாக பணிபுரியும் பராக் அகர்வால் ஒரு வேளை பணி நீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக 325 கோடி ரூபாய் எலான் மஸ்க் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version