உலகம்

அனுமதியின்றி புகைப்படம், வீடியோ பதிவு செய்யக்கூடாது: முதல் நாளே அதிரடி காட்டிய டுவிட்டர் சி.இ.ஓ

Published

on

தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என டுவிட்டர் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டுவிட்டர் சி.இ.ஓஆக இருந்த ஜேக் டார்சி என்பவர் பதவி விலகியதை அடுத்து இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் என்பவர் புதிய சிஇஓவாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் தற்போது இந்தியர்கள்தான் சிஇஓ வாக இருக்கும் நிலையில் டுவிட்டரிலும் இந்தியர் ஒருவர் சி.இ.ஓ ஆக பதவி ஏற்றதும் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரில் புதிய சிஇஓ பாரக் அக்ர்வால் தலைமையில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் பதவியேற்ற முதல் நாளே பாரக் அக்ர்வால் அவர்கள் தனது அதிரடியை காட்டி உள்ளார்.

தனிப்பட்ட நபர்களின் அனுமதி இன்றி அவர்களது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பகிர்வதை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புதிய சிஇஓவாக பதவியேற்கும் முன்னரே பாரக் அக்ர்வால் இதற்கு முன்னதாக மேற்கொண்ட இதற்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் தற்போது சி.ஓ.ஓவாக பொறுப்பேற்ற முதல் நாளே அதனை செயல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து டுவிட்டரில் இனி தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தால் அந்த டுவிட்டர் கணக்கு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இது பல குற்றங்களை, பிரச்சனைகளை, சர்ச்சைகளை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version