உலகம்

2900 கோடி டாலருக்கு ஆன்லைன் நிறுவனத்தை வாங்கிய டுவிட்டர்: முதல் நாளிலேயே என்ன நடந்தது தெரியுமா?

Published

on

ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனம் ஆஃபடர் பே (After Pay) என்ற நிறுவனத்தை டுவிட்டர் நிறுவனம் 2,900 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டுவிட்டர் நிறுவனம் வாங்கிய முதல் நாளிலேயே அந்த நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் உயர்ந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆஃபடர் பே. இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் திடீரென ஒரு புதிய சலுகையை வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி தற்போது பொருட்கள் வாங்கிவிட்டு தவணை முறையில் அதற்கான பணத்தை கொடுக்கலாம் என்று அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பலரும் வேலை இழந்து வருமானம் இல்லாமல் இருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தில் தங்களுக்கு தேவையான பொருள்களை ஆஸ்திரேலிய மக்கள் வாங்கினார். இதனால் அந்நிறுவனத்தின் வியாபாரம் பல மடங்கு பெருகியது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் ஆஃபடர் பே நிறுவனத்தை 2900 டாலருக்கு டுவிட்டர் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்த செய்தி வெளியானதும் நேற்று அந்நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 12 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று மிகப் பெரிய தொகைகளை மாற்றப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் ஆஃபடர் பே நிறுவனத்தை கைப்பற்றி உடன் மேலும் பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போட்டியே இல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகத்தை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version