உலகம்

44 பில்லியன் டுவிட்டர் ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்த எலான் மஸ்க்: என்ன காரணம்?

Published

on

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க போவதாக சமீபத்தில் அறிவித்தார் என்பதும் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதாகவும், டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்து அளவை விட நான்கு மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும் எலான் மஸ்க் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டுவிட்டர் இணையதளத்தில் போலி கணக்குகள் குறித்த உண்மையான தகவல் அளித்தால் மட்டுமே டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஏற்கனவே எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இது குறித்த பேச்சுவார்த்தைகள் டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கும், எலான் மஸ்க் தரப்புக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டு இருந்தது என்பதும் ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நேற்று இரவு டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க் அறிவிப்பு காரணமாக நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version