உலகம்

இன்றைய வேலைநீக்க செய்தி.. இரண்டாவது முறையாக வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்..!

Published

on

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைநீக்க நடவடிக்கை எடுத்த டெக் நிறுவனம் ஒன்று மீண்டும் 17 சதவீத ஊழியர்களை வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு, வருமானம் குறைவு ஆகியவை காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.,

#image_title

குறிப்பாக 2023 ஆம் ஆண்டு பிறந்த பிறகு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையை இழந்து உள்ளனர் என்பதும் இதனால் வேலை இல்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிளவுட் கம்யூனிகேஷன் நிறுவனமான டிவிலியோ லிங்க் என்ற நிறுவனம் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 11% ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 17 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் அலுவலக இடத்தை குறைக்க போவதாகவும், லாபத்தில் கவனம் செலுத்த போவதாகவும், இதற்காக ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது என்றும் தலைமை நெறியாகி நிர்வாகி ஜஃப் லாசன் என்பவர் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி விகிதங்கள், பொருளாதார ஸ்திரமின்மை ஆகிய காரணங்களால் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் இரண்டாவது ஆக மீண்டும் டிவிலியோ நிறுவனம் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து மாத இடைவேளையில் இரண்டாவது முறையாக வேலை நீக்கும் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து இந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலாவது வேலை நீக்க நடவடிக்கைக்கு பின்னர் டிவிலியோ நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 17 சதவீத ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version