வணிகம்

டிவிஎஸ்-ல் சம்பளம் கட்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Published

on

கொரோனா ஊரடங்கினால் வர்த்தகம் சரிந்ததால், டிவிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.

எனவே டிவிஎஸ் நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 15 முதல் 20 சதவீதம் வரை குறைய உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஜூனியர் நிர்வாகிகள் சம்பளம் 5 சதவீதம் வரை குறைய உள்ளது. ஆனால் அடிமட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

சில ஊழியர்கள் தன்னார்வத்துடன் வந்து தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள கூறியது எங்களை நெகிழ வைத்துள்ளது என்றும் டிவிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பஜாஜ் நிறுவனம் ஊழியர்களின் சம்பள குறைப்பு அறிவிப்பை முதலில் அறிவித்தது. ஆனால் அதை பஜாஜ் நிர்வாகம் திரும்பப்பெற்றது.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த சம்பள குறைப்பு மே முதல் அக்டோபர் மாதம் வரையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் முதல் நாள் சம்பளம் வரும் போது ஊழியர்களின் சம்பளம் குறைந்து இருக்கும்.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வர்த்தக சரிவின் காரணமாக ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய அளவில் வேலை இழப்பு மற்றும் சம்பளம் குறைப்பு இருக்கும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version