சினிமா செய்திகள்

பிரபல சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் காலமானார்: நடிகர், நடிகைகள் இரங்கல்

Published

on

இன்று காலை தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீள்வதற்கு முன்பே தற்போது சின்னத்திரை பிரபல நடிகர் ஒருவர் மாரடைப்பால் காலமான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் சற்று முன்னர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி, தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் அப்பா வேடத்தில் நடித்தவர் வெங்கடேஷ் என்பது தெரிந்ததே. பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்களில் கிராமத்து அப்பாவாக நடிப்பதற்கு இவரைத்தான் இயக்குனர்கள் தேர்வு செய்வதுண்டு.

சன் டிவியில் ஒளிப்பரப்பான ’செல்லம்டி நீ எனக்கு’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சியில் மட்டும் ஈரமான ரோஜாவே மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version