தமிழ்நாடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பெற்றோர்களின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?

Published

on

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசின் பதில் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டே பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டிலும் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என்றும் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஏற்கனவே மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி உள்ள நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தேர்வு கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு அரசிடமிருந்து இன்னும் பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த போது தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் வினாத்தாள் தயாரிப்பு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு உள்ளிட்ட செலவுகள் ஆகியுள்ளதால் தேர்வு கட்டணம் திருப்பி அளிக்க வாய்ப்பு குறைவு என்று கூறி வருகின்றனர்.

இது குறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 115ம், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 225 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version