உலகம்
நியூஸ் சேனலில் திடீரென ஓடிய ஆபாச படம்: மன்னிப்பு கேட்ட டிவி நிர்வாகம்!
பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆபாச படம் ஓடியது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் செய்தி வாசிக்கும் போதே நிலநடுக்கம் உள்பட ஒருசில நிகழ்வுகள் நேரலையில் தெரியும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் நேற்று மாலை செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. செய்தி தொகுப்பாளினி செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது அதற்கு தொடர்பான வீடியோ பின்னாலுள்ள ஸ்கிரீனில் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில் செய்தி தொகுப்பாளினி வானிலை செய்திகளை வாசித்து கொண்டிருந்தபோது திடீரென சம்பந்தப்பட்ட செய்தியின் வீடியோக்கு பதிலாக ஆபாச பட காட்சி தவறாக வந்துவிட்டது. செய்தி வாசிப்பாளரின் பின்னால்தான் ஸ்கிரீன் இருந்ததால் அவர் அதை கவனிக்காமல் தொடர்ந்து செய்தி வாசித்துக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 13 வினாடிகள் அந்த ஆபாச காட்சி ஓடியதை அடுத்து பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து உடனடியாக சுதாரித்து கொண்ட செய்தி நிறுவனம் நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விட்டு அதன் பிறகு தவறுகளை சரி செய்து மீண்டும் உண்மையான படக்காட்சியை ஒளிபரப்பு செய்தது. மேலும் தவறுதலாக ஆபாச படம் ஒளிபரப்பு செய்ததற்கு பகிரங்கமான அந்த தொலைக்காட்சியின் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஆபாச படம் ஒளிபரப்பு ஒளிபரப்பானது எப்படி என்று விசாரணை நடந்து வருவதாகவும் இதில் குற்றம் செய்தவர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.