தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவம்: ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா?

Published

on

கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச்சூடு.

போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாக பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக கூறி சம்பவத்தை திசை மாற்றினார். இது அரசு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 கட்ட விசாரணையில் 379 பேரிடம் விசாரணை நடத்தி 555 ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version