தமிழ்நாடு

எனக்கு எதுவும் தெரியாது: விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்த் விளக்கம்!

Published

on

எனக்கு எதுவும் தெரியாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2018ஆம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மிகப்பெரிய கலவரம் வெடித்தபோது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது ’போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எப்படி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார்களோ அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் சமூக விரோதிகள் தான் வன்முறை செய்தனர் என கூறினார்.

இதனை அடுத்து ரஜினியை நேரில் அழைத்து விசாரணை செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்யும் அருணா ஜெகதீசன் முடிவு செய்தனர். இந்த நிலையில் தன்னால் நேரில் வந்து விசாரணை ஆணையம் விளக்கம் அளிக்க முடியாது என்றும் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பினால் அதற்கான விளக்கத்தை எழுத்து பூர்வமாக அளிக்க தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வன்முறை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றும் வன்முறையை தூண்டி விட்டது சமூக விரோதிகளாக இருப்பார்கள் என்று நினைத்தேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version