தமிழ்நாடு

சீர்குலைந்து கிடக்கும் மெயின் ரோடு.. கேட்டால் ஸ்மார்ட் சிட்டி! தூத்துக்குடியின் அவல நிலை!!

Published

on

தூத்துக்குடியில் கனமழையால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக சீர்குலைந்துள்ள நிலையில், தினசரி வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி கடல்பகுதியில் நீடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. இதில் தூத்துக்குடி நகரத்தின் பல்வேறு முக்கிய பகுதிகள், பிரதான சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கின. மழை நின்றும் மழை நீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கின்றன. கனமழையால் சாலைகள் முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக ரஹ்மத் நகர், அம்பேத்கர், முத்தம்மாள் காலனி, விஎம்எஸ் நகர், ஸ்டேட் பேங்க் ஆப் காலனி என பல இடங்களில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. மழை நீரை உறிஞ்சி அகற்ற 200க்கும் மேற்பட்ட மோட்டார்களை ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் இல்லை, வெறும் 20 மோட்டார்களை மட்டும் வைத்துக்கொண்டு கணக்கு காட்டப்படுவதாக தூத்துக்குடி நகர மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version