Connect with us

உலகம்

சர்ஜரி அறைக்கு செல்ல ஸ்ட்ரெச்சருக்கு பதில் மின்சார கார்.. துருக்கி மருத்துவமனையில் அசத்தல் ஐடியா..!

Published

on

அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லும்போது ஸ்ட்ரக்சரில் அழைத்துச் சென்றால் அதிலுள்ள நோயாளிகள் ஒருவித கவலையுடன் இருப்பார்கள் என்பதால் அவர்களை மின்சார கார் மூலம் அழைத்துச் செல்லும் ஐடியாவை துருக்கி மருத்துவமனை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனிதர்களுக்கு வரும் மிகப்பெரிய கொடூரமான நோய்களில் ஒன்று கேன்சர் என்ற புற்றுநோய் என்பதும், இந்த நோய் வந்தவர்கள் அந்த நோயிலிருந்து மீள்வதற்கு பெரும் போராட்டத்துடன் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் துருக்கியில் உள்ள கேன்சர் மருத்துவமனை ஒன்று நோயாளிகளை மனரீதியாக சிகிச்சைக்கு தயார்படுத்துவதற்காக பல்வேறு புதிய ஐடியாக்களை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும்போது அவர்களை நோயாளி போலவே நடத்தாமல் மருத்துவமனையை ஒரு விளையாட்டு மையம் போல் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு பரிசோதனை செய்யும் போதும் குழந்தைகளை ஸ்ட்ரக்சரில் அழைத்து சென்றால் அந்த குழந்தைகள் பயந்து கதறி அழுகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக குழந்தைகளை சர்ஜரி அறைக்கு அல்லது பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லும் போது பொம்மை கார் அல்லது மின்சார காரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அது மட்டும் இன்றி அந்த குழந்தைகள் விளையாடுவதற்கு பலூன்கள் உள்பட ஒரு சில விளையாட்டுப் பொருள்களும் அந்த காரில் வைக்கப்படுகிறது.

குழந்தைகள் தாங்கள் பரிசோதனை மையத்துக்கு அல்லது அறுவை சிகிச்சை மையத்துக்கு செல்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கும் போது அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் இந்த ஐடியா மூலம் குழந்தைகள் மனரீதியாக நம்பிக்கை பெற்று கேன்சரில் இருந்து குணமாகி வருவதாகவும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துபாய் எர்சியஸ் மருத்துவமனையின் குழந்தை புற்றுநோயியல் துறையின் இயக்குநருமான டாக்டர் மூசா காரகுர்க்கு அனடோலு அவர்கள் தெரிவித்த போது ’எங்களிடம் ஆறு மின்சார கார்கள் உள்ளன. சில சமயங்களில் மருத்துவமனையில் குழந்தைகளை டோமோகிராபி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய அனுப்புவோம். அப்போது இந்த கார்களில் தான் அவர்கள் அந்த அறைகளுக்கு செல்கிறார்கள். நாங்கள் குழந்தைகளை ஸ்ட்ரக்சரில் அனுப்பினால் அந்த குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு கதறி அழுகின்றன. ஆனால் மின்சார கார அல்லது பொம்மை காரில் அனுப்பினால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் நிதானமாக விளையாட்டு எண்ணத்தோடு இருப்பதால் எங்களுக்கு பரிசோதனை செய்யவும் மிகவும் எளிதாக இருக்கிறது. மின்சார கார் மற்றும் பொம்மை காரில் பயணம் செய்வதில் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவதோடு மனரீதியாகவும் வலிமை அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!