உலகம்

3 நாட்களுக்கு முன்பே துருக்கி பூகம்பத்தை கணித்த டச்சு ஆராய்ச்சியாளர். ஆச்சரிய தகவல்..!

Published

on

இந்த நிலையில் துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தை முன்கூட்டியே பறவைகள் கணித்தது என்பதும், பறவைகள் அச்சத்துடன் பச்ந்த வீடியோ வைரலானது என்பதையும் பார்த்தோம். ஆனால் பறவைகளையும் முந்தி டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே துருக்கியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

டச்சு ஆராய்ச்சியாளர் பிராங்க் கூகர்பிட்ஸ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது டுவீட்டில் மத்திய துருக்கி, தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி அவர் பூகம்பம் ஏற்படும் பகுதியை வரைபடத்தையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கணித்தது போலவே சரியாக அதே இடத்தில் நேற்று அதிகாலை துருக்கி சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. தான் சொன்னது போலவே நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து டச்சு ஆராய்ச்சியாளர் பிராங்க் கூகர்பிட்ஸ் கூறியபோது இந்த நிலநடுக்கத்தால் தான் மன நிம்மதியை இழந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் ஒரு பெரிய நில நடுக்கதற்கு பிறகு அடுத்தடுத்து சிறிய நில நடுக்கங்கள் நிகழும் என்று அவர் கூறியது போல நேற்று அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கதிற்கு பிறகு அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version