உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 5 பேர் பலி.. பல கட்டிடங்கள் சரிந்து நாசம்!

Published

on

துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டும் ஆகியுள்ளன.

Turkey Earthquake, 7.8 Magnitude, Atleast 5 Dead

சுமார் 33 கிலோமீட்டர்கள் (20 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது நூர்தாகி நகரத்திலிருந்து 26 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் லெபனான், சிரியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகச் செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது.

துருக்கி அதிகாரிகள் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று கூறியிருந்தனர். ஆனால் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட பல வீடியோக்கள் நிலநடுக்கத்தால் நாட்டின் தென்கிழக்கில் பல நகரங்களில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மாகாணத்தில் 34 கட்டிடங்கள் அழிக்கப்பட்டதை ஆளுநர் எர்டிங்க் யில்மாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றின் கீழ் துருக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டில், 7.4 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் டஸ்ஸைத் தாக்கியது, இஸ்தான்புல்லில் சுமார் 1,000 பேர் உட்பட 17,000க்கும் அதிகமானோர் அதில் இறந்தனர்.

மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் இஸ்தான்புல்லில் பேரழிவை ஏற்படுத்தும் என்று நிலநடுக்கவியலாளர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version