உலகம்

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் ஆட்சிக்கலைப்பு! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுகள் போராடி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக ஆட்சியை கலைத்து அதிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அலை, இரண்டாவது அலை ஆகிய இரண்டும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர் என்பதும்
கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அது மட்டுமின்றி கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பின்தங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் போராடி வரும் நிலையில் துனிசியா நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லை மீறிச் சென்றுள்ளது. கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான துனிசியா நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட்னர்.

இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததன் காரணமாக துனிசியா நாட்டின் ஜனாதிபதி அந்நாட்டு அரசை கலைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் துனிசியா பிரதமர் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துனிசியா நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக ஒரு நாட்டின் அரசு கலைக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version