ஆரோக்கியம்

கட்டிகள், வாய்ப்புண் குணமாகத் திருநீற்றுப் பச்சிலை!

Published

on

திருநீற்றுப் பச்சிலை, உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதி பச்சிலை, பச்சபத்திரி, திருநீற்றுப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் இதற்கு உள்ளன. நறுமணம் வீசும் திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகளை அரைத்து கட்டிகளின் மீது பூசினால் உடனே கட்டிகள் கரையும்.

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும்.அதேபோல் இதன் விதையைப் பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.

இதன் இலைகளை வெறுமனே முகர்ந்தாலோ அல்லது நீரில் போட்டுக் கொதிக்கவைத்து ஆவி இதயத்துடிப்பு, தூக்கமின்றி ஆகிய பிரச்சனைகள் சரியாகும். திருநீற்றுப் பச்சிலை இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்துக் குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, இரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்.

இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட, கப நோய்கள் மறைவது மட்டுமன்றி செரிமானக் கோளாறுகள் சாந்தமடையும். சமையலில் சிறிதளவு இதன் சாற்றைச் சேர்த்து வர, வயிற்றிலுள்ள புழுக்கள் தெறித்து ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

திருநீற்றுப் பச்சிலை செடியின் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும்.

சிறுநீரைப் பெருக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும். இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இதில் செய்த சர்பத்தைக் குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.

#image_title

இதன் இலைகளை வெளிப்பிரயோகமாகத் தொடர்ந்து பயன்படுத்த நல்ல பலனைக் கொடுக்கும். கொப்புளங்களின் மீது இதன் இலையை அரைத்துத் தடவ, அவற்றின் வீரியம் குறையும். இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்சினைகள் சரியாகும்.

 

seithichurul

Trending

Exit mobile version