தமிழ்நாடு
நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் யாருடன் கூட்டணி!
![TTV Dinakaran 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/TTV-Dinakaran-1.jpg)
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்பது குறித்து அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளது. இதனையடுத்து திருச்சியில் நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார் டிடிவி தினகரன். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
மேலும் தேசியக் கட்சிகள் தமிழகத்தின் நலன்களில் அக்கறை காட்டவில்லை. மாநிலக் கட்சிகள்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதைத்தான் 2014 தேர்தலில் தமிழக மக்கள் தொடங்கி வைத்தார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்களால் நடத்தப்படுகிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் நலன்களோடு ஒத்துப்போகிறவரையே பிரதமராகத் தேர்வு செய்ய ஆதரவு அளிக்கும் என்றார்.