தமிழ்நாடு

ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்!

Published

on

ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ளார்.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் முன்னரே அந்த தொகுதிகள் வஞ்சிக்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் கூறி 22 தொகுதிகளில் அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் 18-பேரும் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வந்தது. இதனையடுத்து திட்டமிட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆண்டிப்பட்டி தொகுதியில் நவம்பர் 10-ம் தேதியும், நிலக்கோட்டை தொகுதியில் 11-ம் தேதியிலும் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுக்க, அமமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி அனுமதியை பெற்றனர்.

இதனையடுத்து திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி ஆண்டிப்பட்டியில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து உரையாற்றவுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version