தமிழ்நாடு

அதிமுகவில் இணைய தினகரனுடன் சமரச பேச்சுவார்த்தை: ஆதீனம் கருத்துக்கு தினகரன் பதிலடி!

Published

on

அதிமுகவில் தினகரன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரால் நீக்கப்பட்டதை அடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக களத்தில் செயலாற்றி வருகிறார்.

மக்களவை தேர்தலின் போது அதிமுக உடன் தினகரனின் அமமுகவை இணைக்க சில முயற்சிகள் நடந்தன. ஆனால் தினகரன் அதற்கு உடன்படாததால் அந்த முயற்சிகள் பலனற்று போனது. அதிமுக உடன் இணையும் எண்ணமே தனக்கு இல்லை என தினகரன் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சேலத்தில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அமமுகவை தான் ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை என்றார். மேலும், அமமுக என்று ஒரு கட்சியை பதிவு செய்திருக்கிறார்களா? பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைத்ததுபோல அந்தக் கட்சி உள்ளது என்று விமர்சித்தார். இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், தினகரனுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்றார்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் இந்த கருத்து அமமுக, அதிமுக இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் இந்த கருத்துக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அதிமுகவில் இணைப்பதற்காகத் தன்னிடம் சமரசப் பேச்சு நடந்து வருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version