தமிழ்நாடு

நடுரோட்டில் தூக்கில் தொங்கியிருப்பேன்: அன்புமணியை விளாசிய தினகரன்!

Published

on

அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தற்போது அதிமுக உடனே கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அமமுக சார்பாக தினகரனின் தீவிர ஆதரவாளரான ஜோதிமுருகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பழனி அருகே பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன், ஜெயலலிதா மறைந்த பிறகு சட்டமன்றத்தில் உருவப்படத்தை திறக்க கூடாது என்ற சொன்ன கட்சிகளுடனும், மணிமண்டபம் கட்டக்கூடாது என்று சொன்ன பாமகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது அதிமுக.

எடப்பாடி பழனிசாமியை மானங்கெட்டவனே, வெட்கம்கெட்டவங்களே நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியுமா, ஆட்சி என்றால் என்னவென்று தெரியுமா, சட்டஒழுங்கு என்றால் என்னவென்று தெரியுமா, பன்னீர்செல்வத்தை டயர் நக்கி எனக்கூறி கீழ்தரமாக விமர்சனம் செய்தார் அன்புமணி. ஆனால் அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். தமிழக மக்கள் ஏமாந்தவர்களா, பட்டாளி சொந்தங்கள் ஏமாந்தவர்களா.

எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளது, மெகாகூட்டணி இல்லை, மானங்கெட்ட கூட்டணி. அன்புமணி போன்று நான் பேசியிருந்தால், நடுரோட்டில் தூக்கில் தொங்கியிருப்பேன். அன்புமணியை கிளை செயலாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்க்கு கை நீட்டி செம்மலை அடிக்கிறார். அதிமுக தொண்டர்க்கு அடிவிழும் நிலைதான் தற்போது உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version