தமிழ்நாடு

இந்துக்களின் ஆதரவை நாடும் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார்: தினகரன் விளாசல்!

Published

on

திமுக என்றால் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்து அரசியலில் நிலவி வருகிறது. ஆனால் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை சமீப காலமாக கூறிவருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனை நாடகம் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை பெற பெரும்பான்மை மக்களான இந்து மக்களை எதிர்க்கிறது என விமர்சனங்கள் உண்டு. ஆனால் தற்போது பெரும்பான்மை மக்களை பகைத்துக்கொள்ள கூடாது என ஸ்டாலின் நாடகமாடுவதாக தினகரன் கூறியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கி.வீரமணியும் தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் திமுகவின் தலையும் உருண்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் வீரமணி கூறிய கருத்து தவறு என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்துக்களுக்கு ஆதரவாக கூறினார். மேலும் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என குறிப்பிட்ட ஸ்டாலின் தனது மனைவில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர் எனவும், தினமும் இரண்டு வேளை கோயிலுக்கு செல்வார் எனவும் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து தூத்துக்குடி பிரச்சாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அதில், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை திமுக முற்றிலும் இழந்துவிட்டதால், வரும் தேர்தலில் இந்துக்களின் ஆதரவை நாடும் நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். சிறுபான்மையினர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என விமர்சித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version