தமிழ்நாடு

எடப்பாடியால் எல்லாரையும் காசு கொடுத்து வாங்க முடியுமா? சீறும் தினகரன்!

Published

on

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் அதிமுகவில் எடப்பாடியின் கை ஓங்கி நிற்கிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என எதிர்த்த எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு கிட்டத்தட்ட இனிமேல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தான் எல்லாமே என்ற நிலை வந்துவிட்டது. இத்தனை நாட்களாக நீடித்து வந்த அதிமுகவின் குழப்பங்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும் எதிர் தரப்பினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்டனர்.

#image_title

இந்நிலையில் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று கூறிவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த தீர்ப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்து தான் வருகிறார். மதுரையில் இன்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பொதுக்குழுவின் தீர்மானம் குறித்து நீதிபதிகள் எந்த கருத்தும் கூறவில்லை. ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை தொடர்வார். பழனிசாமிக்கு அடி விழும்போது தொண்டர்கள் அவரை விட்டு வெளியே வந்து விடுவார்கள். அவர் துரோக சிந்தனை உள்ளவர். அவரால் அதிமுகவில் உள்ள அனைவரையும் நன்றாக வைத்திருக்க முடியுமா? பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.

பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தே அவரால் வெற்றிபெற முடியவில்லை. தினகரன் யார் என்பதை காலம் உணர்த்தும். பணபலத்தாலும் மூத்த நிர்வாகிகளை மட்டும் வைத்து விட்டு கட்சியை வெற்றிபெற வைக்க அவரால் முடியாது. யாரோ சிலரை காசு கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் அவரால் காசு கொடுத்து வாங்கி விட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் தினகரன்.

seithichurul

Trending

Exit mobile version