தமிழ்நாடு

திமுகவுக்கு திருவாரூரில் அடிகொடுத்து பழிதீர்க்க காத்திருக்கும் தினகரன்!

Published

on

அமமுக மாநில அமைப்புச்செயலாளராகவும், அமமுக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் வலம் வந்தவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ செந்தில் பாலாஜி. முன்னாள் அமைச்சராக இருந்த இவர் சில தினங்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

அமமுக முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை மற்றும் பேட்டிகள் மூலம் பதில் அளித்து வந்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பழைய கட்சி ஒன்று எங்களிடமிருந்த ஒருவரை தூண்டில் போட்டு வளைக்கின்ற அளவுக்கு இருக்கிறது அவர்களது நிலைமை. காரணம் ஆர்கே நகரில் டெபாசிட் இழந்ததுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். அதில் குறிப்பாக திருவாரூரில் அந்தக் கட்சிக்கு ஒரு அடி கொடுத்தால் சரியாகிவிடும் என திமுகவை மறைமுகமாக விமர்சித்து எச்சரித்துள்ளார்.

Trending

Exit mobile version