தமிழ்நாடு

பாதிக்கப்பட்டவர்களை இன்னும் சந்திக்காதது ஏன்: முதல்வருக்கு தினகரன் சரமாரி கேள்வி!

Published

on

ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20-ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களை சந்திக்க முடியாத அளவுக்கு மக்கள் போராடுகிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்க்க முதல்வர் தயங்குகிறார். அவர் ஏன் பயப்படுகிறார்? இந்நேரம் அவர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டுமல்லவா?

ஏற்கெனவே திட்டமிட்டபடியான நிகழ்ச்சிகள் இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை என்று முதல்வர் கூறுகிறார். எங்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்களை தள்ளிவைத்துவிட்டு, எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான நான் செல்கிறேன். சுனாமி வந்த அடுத்த நாளே ஜெயலலிதா பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டார். முதல்வர் அங்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

seithichurul

Trending

Exit mobile version