தமிழ்நாடு

அனைவருமே சுழியமாகப் போகிறார்கள்: தினகரன் விளாசல்!

Published

on

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ள பாஜக பிரிந்து கிடக்கும் அதிமுகவை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் ரகசியமாக பேசப்படுகிறது. முன்னதாக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தினகரன் கட்சியும், அதிமுகவும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அதிமுகவை, பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் தினகரனை சமாதானம் செய்து மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் பாஜக மறைமுகமாக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவையும், அதனுடன் கூட்டணி அமைக்க உள்ள கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதால் தான் கூட்டணி அமைக்க இருக்கிறார்கள். ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகும் அனைவருமே சுழியமாகப் போகிறார்கள். எத்தனை கட்சிகளை கூட்டணியில் சேர்த்தாலும் இவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் சேருவோருக்கும் டெபாசிட் கிடைப்பதே கடினம் என்றார். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version