தமிழ்நாடு

சசிகலா தேர்தலில் போட்டியிடுவாரா? டிடிவி தினகரன் பேட்டி!

Published

on

வரும் சட்டமன்ற தேர்தலில் தான் இரண்டு இடங்களில் போட்டியிடப் போவதாகவும் ஆர்கேநகர் மற்றும் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவர் போட்டியிடுவார் என்றும் டிடிவி தினகரன் கூறினார். அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால் தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி. அதன்படி தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்திருக்கும் சசிகலா 2027 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சிக்கிம் மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற தபாங் என்பவருக்காக பாஜக அரசு ஒரு சில விதிகளை தளர்த்தி அவரை முதல்வர் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சட்டத்தில் உள்ள ஒரு சில வழிகளை பயன்படுத்தி சசிகலாவை தேர்தலில் போட்டியிட வைக்க அமமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Trending

Exit mobile version