தமிழ்நாடு

அவர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள செல்வதில் என்ன தவறு: தினகரன் அசால்ட்!

Published

on

மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி வருகின்றனர். சில முக்கிய நிர்வாகிகள் கூட அமமுகவை விட்டு விலகி திமுக, அதிமுக கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அரசியலில் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களாக இருந்து தனி அணியாக செயல்பட்டு வந்த இரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்புனார்கள்.

இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், அமமுகவை கட்சியாக பதிவு செய்யக் கூட்டம் நடந்தபோது அவர்களிடம், நீங்கள் கட்சியை பதிவு செய்யும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் பதவி போய்விடும். நீங்கள் தனித்தே செயல்படுங்கள் என்றுதான் கூறினேன். இரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் ஊடகங்களில் பேசியதை நான் பார்த்தேன். அவர்கள் எதற்காக பேசுகிறார்கள் என்றும் யார் சொல்லி பேசுகிறார்கள் எனவும் தெரியும். கடந்த வாரம் வரை அவர்கள் என்ன பேசினார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும்.

அவர்கள் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சென்றுள்ளனர். அதில் ஒன்றும் தவறில்லை என்றார் அசால்ட்டாக. நிர்வாகிகள் விலகுவதால் ஒரு இயக்கம் வீழ்ச்சியடைந்துவிடாது. ஆனால், வீழ்ச்சியடைந்துவிடுவோம் என்கிற பிம்பத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உருவாக்குகிறது. அதனை நிச்சயம் பொய்யாக்குவோம் என்றார் தினகரன்.

Trending

Exit mobile version