தமிழ்நாடு

சந்திரமுகியா மாறிய பிரேமலதா: டிடிவி தினகரன் கிண்டல்!

Published

on

மக்களவை தேர்தலை சந்திக்க தேமுதிக கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதி திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் ஊடகங்களில் வெளியானது. தேமுதிகவின் இந்த அனுகுமுறை அரசியலில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் தேமுதிகவின் செல்வாக்கு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் எடுபடவில்லை.

இந்நிலையில் தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் செய்தியாளர்களையும், திமுக தலைவர்களையும் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமல்லாமல் அவர் அதிமுகவையும் விமர்சித்தார்.

பிரேமலதா அன்று செய்தியாளர்களை அனுக்கிய விதம் மிகவும் மோசமானது. சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் இதற்காக பிரேமலதாவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதிமுக எம்பிக்கள் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என விளாசினார். ஆனால் அதன் பிறகும் அதிமுக, தேமுதிக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அமமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பிரேமலதா சந்திரமுகி மாதிரி பேசினாங்க. ஆனால் அதையெல்லாம் மறந்து தேமுதிக உடன் அதிமுக கூட்டணி வைக்கிறது. சமூக வலைதளங்களை மறைக்க முடியாது. பாஜக மீது மக்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் என கிண்டலாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆர்கே நகர் தொடருமா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். திருவாரூர் இடைத்தேர்தல் வைத்திருந்தால் அது தெரியும் என பதிலளித்தார்.

Trending

Exit mobile version