தமிழ்நாடு

டிடிவி தினகரன் மகள் திருமண தேதி அறிவிப்பு: சசிகலா தலைமையில் என தகவல்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணி தஞ்சாவூரை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி துளசி வாண்டையார் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த திருமணம் கடந்த ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் திருமண தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு, முக்கிய கோவில்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெய் ஹரிணி மற்றும் ராமநாதன் துளசி ஆகிய இருவருக்கும் செப்டம்பர் 16ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் சசிகலா தலைமையில் நடைபெறும் என்றும் இந்த திருமணத்தில் அதிமுக பிரமுகர்கள் ஒருசிலர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயஹரிணி- ராமநாதன் துளசி திருமணம் செப்டம்பம் 16ம் தேதி காலை 8.30 முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி புதிய மேடையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகளை டிடிவி தினகரன் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version