தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு!

Published

on

இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்தது. இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சமீபத்தில் இரட்டை இலை தொடர்பான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. இது தினகரன் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் இரட்டை இலை விவகாரத்தை விடப்போவதில்லை என்ற முடிவோடு டிடிவி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இடைக்காலமாக எங்கள் தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார்.

Trending

Exit mobile version