தமிழ்நாடு

‘மனசாட்சியற்ற செயல்!’- ஒன்றிய அரசுக்கு எதிராக திடீரென கொந்தளிக்கும் டிடிவி தினகரன்

Published

on

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதைப் போலவே டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. சமையல் சிலிண்டர் விலையும் மாதத்துக்கு 50 ரூபாய் ஏறிக் கொண்டிருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஒன்றிய அரசுக்கு எதிராக கொந்தளித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.

பெட்ரோல் – டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, கொரோனா பேரிடரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version