சினிமா செய்திகள்

திருப்பதி கோவிலில் யார் யாருக்கெல்லாம் சிறப்பு தரிசன அனுமதி கிடையாது: தேவஸ்தானம் அறிவிப்பு

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யார் யாருக்கு சிறப்பு தரிசன அனுமதி கிடையாது என்பது குறித்த விவரங்களை திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு சிறப்பு தரிசன முறையை மீண்டும் அமல்படுத்தபட்டுள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்திக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிறப்பு தரிசன முறையில் திருப்பதி தேவஸ்தானம் மாற்று திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் எனவே பக்தர்கள் அவற்றை நம்பி திருமலைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version