இந்தியா

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் அனுமதி எப்போது? தேவஸ்தான தலைமை நிர்வாகி தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது திருப்பதி திருமலை திருக்கோயிலில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதுவரை தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 8 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவதாக திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த நிலையில் இலவச தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி எப்போது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி அவர்கள் சித்தூர் மாவட்ட ஆட்சியர் தினமும் ஆயிரம் பக்தர்களையாவது இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கை குறித்து நாங்கள் பரிசீலித்து செய்து வருகிறோம் என்றும், ஆந்திர அரசு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கினால் மக்கள் நலன் கருதி இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். எனவே விரைவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது அலிபிரி நடைபாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது அந்த வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் செப்டம்பர் மாதம் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் பக்தர்கள் அலிபிரி பாதை வழியாக நடந்து செல்லலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version