இந்தியா

திருப்பதியில் இலவச தரிசனம் நிறுத்தம்: ரூ.300 தரிசனம் மட்டுமே அனுமதி!

Published

on

தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. அனைத்து மாநிலங்களும் மற்றும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனிமேல் இலவசத் தரிசன அனுமதி கிடையாது என்ற தகவல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் 300 ரூபாய் டிக்கெட் வாங்கி தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும் திருப்பதி கோவிலில் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற் அடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version