இந்தியா

திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டர், விஐபி தரிசனம்: தனியார் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!

Published

on

திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று விஐபி தரிசனம் செய்ய வைப்போம் என்று தனியார் நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று பக்தர்களை விஐபி சுவாமி தரிசனம் செய்ய வைக்க பல தனியார் நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் ஒன்று இணையதளங்களில் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வோம் என்றும் அது மட்டுமின்றி அங்கு விஐபி தரிசனத்தின் மூலம் சுவாமி தரிசனம் செய்ய வைப்போம் என்றும் அதுமட்டுமின்றி திருப்பதியில் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி திருப்பதி தரிசனம் முடிந்தவுடன் சென்னை கோவை பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் ஹெலிகாப்டரில் அழைத்து செல்வோம் என்றும் இதற்கு கட்டணம் ரூ.1.11 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான விளம்பரம் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தின்படி விஐபி தரிசனம் என்பது நேரடியாக விஐபிகளுக்கும் விஐபியிடம் இருந்து கடிதங்கள் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் இதுபோன்று தனியார் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் விஐபி தரிசன டிக்கெட் வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற திட்டத்தின்படி ரூபாய் பத்தாயிரம் நன்கொடை செலுத்தி அதன் பின்னர் விஐபி டிக்கெட் கட்டணமாக ரூ.500 ஆகமொத்தம் ரூ.10,500 செலுத்தினால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஐபி டிக்கெட்டை பக்தர்களுக்கு வழங்கும் என்றும் தெரிவித்து தனியார் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி லட்சக்கணக்கில் பணம் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version