இந்தியா

திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

இன்னும் ஒரு சில நாட்களுக்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக வங்ககடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக ஆந்திராவில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி – திருமலை இடையிலான இரண்டாவது மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்கும் திருமலைக்கும் இடையே இரண்டு மலைப்பாதைகள் இருந்து வரும் திரையில் இரண்டாவது மலைப்பாதையில் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை மற்றும் சூறாவளி காரணமாக திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி நகர் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழை தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் திருமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மலைக்கு பயணம் செய்யும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு திருமலைக்கு செல்லும் மலைப் பாதை மூடப்பட்டு உள்ளதாகவும் இதனால் பக்தர்கள் திருப்பதிக்கு இன்னும் ஒரு சில நாட்களுக்கு வரவேண்டாம் என்றும் நிலைமை சரியானதும் தேவஸ்தானம் அறிவிப்பு செய்தவுடன் பக்தர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் திருப்பதி பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version