தமிழ்நாடு

புதுச்சேரிக்கு திடீர் சுனாமி எச்சரிக்கை: கடற்கரையில் இருந்து அலறியடித்து ஓடும் பொதுமக்கள்

Published

on

புதுச்சேரி கடற்கரைக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுவை கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியா பகுதியில் உருவான நிலநடுக்கம் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் சுனாமி அலைகள் எழ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் புதுவை கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி பார்ப்பதற்கும் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி போலீசார் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் கடற்கரை சாலையில் மற்றும் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

புதுசேரி கடல் தற்போது சீற்றத்துடன் காணப்படுவதால் காணப்படுவதாகவும் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் கடலில் இறங்கிய பொதுமக்கள் அச்சப்பட்டு கொண்டு கடற்கரையில் இருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடற்கரை சாலையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புதுவை கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சென்னையில் உள்ள எந்த கடற்கரைக்கும் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version