ஆரோக்கியம்

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

Published

on

அசைவ உணவு பிரியர்களுக்குப் பிடித்த ஒன்று காடை. காடையில் குறைவான கொழுப்பு உள்ளதுடன், அதேசமயம் கோழியை விட அதிக சத்துக்களும் நிறைந்துள்ளது. நீங்கள் தொடர்ந்து ஒரே வகை ரெசிபி செய்து சாப்பிடாமல், ஒரு முறை காடை வறுவல் செய்து சுவையடையுங்கள். இந்த காடை வறுவல் சுவையானதும் ஆரோக்கியமானதும், செய்ய மிகவும் எளிதான ஒன்றாகும். குறிப்பாக, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால், அவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

காடை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

காடை – 4
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

முதலில் காடைகளை நன்கு கழுவி, ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதனை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து விடுங்கள்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும், காடை துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான காடை வறுவல் தயார்! இதனை நீங்கள் சாதம் அல்லது பரோட்டாவுடன் பரிமாறலாம்.

 

Poovizhi

Trending

Exit mobile version