உலகம்

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

Published

on

முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தை ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தனது சமூக வலைதளங்களில் டிரம்ப் பதிவு செய்தார். இதனை அடுத்து வன்முறையை தூண்டியதாக அவருடைய டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.

இதனால் தனது கருத்தை பொதுமக்களுக்கு சொல்ல முடியாத நிலை டிரம்ப்புக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தனக்கென ஒரு இணைய தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளார் டிரம்ப். இந்த இணையதளத்தில் அவர் பதிவு செய்யும் கருத்துகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இணைய தளம் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் இந்த இணையதளத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version