வேலைவாய்ப்பு

டிஆர்பி அறிவிப்பு: தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை!

Published

on

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2144. இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Post Graduate Assistants / Physical Education Directors Grade-I
Advertisement

மொத்த காலியிடங்கள்: 2144

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Tamil – 319
2. English – 223
3. Mathematics – 279
4. Physics – 210
5. Chemistry – 356
6. Botany – 154
7. Zoology – 144
8. History – 104
9. Geography – 11
10. Economics – 211
11. Commerce – 99
12. Political Science – 14
13. Physical Education – 16
14. Bio Chemistry – 01
15. Micro Biology – 01
16. Home Science – 01
17. Indian Culture – 01

கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றுப் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளநிலை மற்றும் முதுநிலை படப்பிடிப்பில் ஒரே பாடத்தைப் படித்திருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf?fbclid=IwAR0bQ5zTmMGq12j1mt1NDdTV0_GzgbmF7XNg6tomZ3ovelEavss3lbuG5DM என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 24.06.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2019

seithichurul

Trending

Exit mobile version