சினிமா செய்திகள்

ராங்கியாக மாறும் த்ரிஷா!

Published

on

வீம்புக்காரி, சண்டைக்காரியை கிராமப் புறங்களில் ராங்கி எனும் அடைமொழி வைத்து அழைப்பார்கள். அந்த தலைப்பில் தான் த்ரிஷா அடுத்து நடிக்கவுள்ள படம் உருவாகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக த்ரிஷா நடிக்கவுள்ள ராங்கி படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்டது.

இந்த படத்தில் த்ரிஷா யாருக்கு ராங்கியாக இருக்கப் போகிறார் என்பது தான் ட்விஸ்ட். இந்த படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளது கூடுதல் சுவாரஸ்யம்.

படத்தை பற்றியும், படத்தில் நடிக்கப் போகும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பையும் லைகா நிறுவனம் விரைவில் அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version