சினிமா செய்திகள்

த்ரிஷா என் கன்னத்தை கிள்ளினார் – துருவ் விக்ரம் பரபர பேட்டி

Published

on

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வர்மா படம் வரும் காதலர் தினத்துக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், துருவ் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் எந்த நடிகையை பிடிக்கும் மற்றும் எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த துருவ் விக்ரம், தனக்கு த்ரிஷாவைத் தான் ரொம்ப பிடிக்கும் என்றார். மேலும், தான் இதுவரை அவர்களை நேரில் சந்திக்கவில்லை என்றும், ஒரு முறை ப்ரிவ்யூ தியேட்டரில் நான் தூங்கிக் கொண்டிருந்த போது, எனது கன்னத்தை அவர் கிள்ளிச் சென்றதாக அப்பா தெரிவித்தார் என்றும் துருவ் விக்ரம் பேட்டியளித்தார்.

சாமி, பீமா போன்ற படங்களில் விக்ரமுடன் த்ரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version