சினிமா செய்திகள்

பாலிவுட் சூப்பர் ஹிட்டான பட ரீமேக்கில் த்ரிஷா!

Published

on

பாலிவுட்டில் 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிக்கு.

காமெடி, குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமான இதில் தீபிகா படுகேன், அமிதாப் பச்சன் மற்றும் இர்ஃபான் கான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். ஷூஜித் சிர்கார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி த்ரிஷா இந்த படத்தில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

பிக்கு படம் முழுவதும் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தைச் சுற்றியே நகரும். எனவே அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்றும், இர்ஃபான் கான் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இருவருமே பாலுவுட்டில் டாப் 10 இடத்தில் இருந்த நடிகர்கள்.

96 படம் முதலே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் த்ரிஷா கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் கடைசியாக அவர் நடித்த இரண்டு பேய் படங்கள் சரியாகப் போகவில்லை.

பிக்கு பட ரீமேக்கில் சரியான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்தால், கண்டிப்பாக த்ரிஷாவுக்கு இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version