சினிமா செய்திகள்

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம்: பிரபல நடிகை தகவல்!

Published

on

நடிகை த்ரிஷாவுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும் என அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான சார்மி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 38 வயது முடிந்து விட்டது. இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவருடைய திருமணம் எப்போது என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் த்ரிஷாவுக்கு அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் த்ரிஷாவுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடந்துவிடும் என்று அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவரும் நடிகையுமான சார்மி தெரிவித்துள்ளார். நேற்று நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறிய நடிகை சார்மி, நடிகை த்ரிஷா கொண்டாடும் கடைசியில் பேச்சிலர் பிறந்த நாள் இதுதான் என்றும் அடுத்த ஆண்டு அவர் தனது கணவருடன் பிறந்தநாளை கொண்டாடுவார் என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து த்ரிஷாவின் ரசிகர்கள் அனைவரும் இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு திருமணம் நடந்து விடுமா என்ற கேள்வியை தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர். இதற்கு த்ரிஷா என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version