சினிமா

ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா.. கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கம்பேக்!

Published

on

டேராடூன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நம்பிக்கையை அளிக்க கூடிய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான படிப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்காக ரஜினி டேராடூன் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் புறப்பட்டு சென்று ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா

ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா

3 மாதத்தில் ஷூட்டிங் முடித்து படத்தை வேகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். வரும் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

ரஜினி விஜய் சேதுபதியை திரையில் பார்க்க எல்லோரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் திரிஷா நடிப்பது குறித்து இன்றுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. திரிஷா முதல்முறையாக ரஜினியுடன் நடிக்கிறார்.

Trending

Exit mobile version