சினிமா செய்திகள்

’96’ தோல்விக்கு த்ரிஷாவை பழிவாங்கிய சமந்தா

Published

on

த்ரிஷா நடித்த 96 என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ’ஜானு’ படத்தில் சமந்தா நடித்து இருந்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை அடுத்து த்ரிஷா அளவுக்கு சமந்தாவால் நடிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்ததால் சமந்தா தரப்பு கடும் அப்செட்டில் இருந்தது .

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் முதலில் கதீஜா வேடத்தில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது.

ஆனால் த்ரிஷாவின் தேதி கிடைக்கவில்லை என்பதால் சமந்தாவுக்கு அந்த கேரக்டர் கிடைத்தது. அப்போதே நெட்டிசன்கள் ஏற்கனவே 96 படத்தில் த்ரிஷா அளவுக்கு நடிக்க முடியாத சமந்தா, இந்த படத்தில் த்ரிஷா கேரக்டரை நடித்துவிடுவாரா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

ஆனால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் கதீஜா கேரக்டரில் சமந்தா சூப்பராக நடித்து ‘ஜானு’ தோல்விக்கு த்ரிஷாவை அவர் பழிவாங்கியதாக கூறி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version