இந்தியா

புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது: பெரும் பரபரப்பு!

Published

on

புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மீபத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் நிருபர்கள் புரளியை பரப்பியதாக கைது செய்யப்பட்டனர். இரு மதங்களுக்கு இடையிலான கலவரம் குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருவரும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் திரிபுரா மாநில காவல்துறையினர் அந்த இரண்டு பெண் நிருபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மாவட்ட நீதிபதியிடம் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு மதங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஜாமீன் மனு தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார். திரிபுரா அரசு உள்நோக்கத்தோடு இரண்டு பெண் நிருபர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக காவல் துறை சார்பில் இரண்டு நிருபர்களுக்கும் ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீதிபதி இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார் இதனால் இருவரும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த 2 பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version